2025 மே 15, வியாழக்கிழமை

தங்க நகைகள் திருட்டு ; 24 வயதான பெண் கைது

Janu   / 2023 ஜூன் 18 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்ஷன் வினோத்

நெல்லியடி பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றில்   8 இலட்சத்து 80,000 ரூபாய்  பெறுமதியான 6.5 பவுண் நகைகள் வெள்ளிக்கிழமை (16) களவாடப்பட்டுள்ளன.  அருகில் இருந்த நட்பு ரீதியான குடும்பத்தினராலேயே குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வேலை நிமிர்த்தமாக வெளியில் சென்றிருத்த வீட்டின் உரிமையாளர் மதியம் வீட்டிற்கு திரும்பியருந்த போது நகைகள் களவாடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக விசாரணையில் இறங்கிய பொலிஸ் குழுவினர் ஒரு மணித்தியாலத்திற்குள் இரண்டு பிள்ளைகளின் தாயாரான (வயது 24)  சந்தேகநபரை கைது செய்து , நகைகளையும் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர் மற்றும் மீட்க்கப்பட்ட நகைகள் பருத்தித்துறை நீதிமன்றல் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .