2025 ஜூலை 03, வியாழக்கிழமை

தொடரூந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

R.Tharaniya   / 2025 ஜூலை 02 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா ஓமந்தை பறண் நட்டகல் பகுதியில் தொடரூந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
குறித்த விபத்து புதன்கிழமை(02)அன்று இடம்பெற்ற  இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில். A 9 வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பறண்நட்டகல் வீதிக்கு செலுத்த முற்பட்ட போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்தையடுத்து குறித்த தொடரூந்து அரைமணிநேரம் தாமதமாகவே கொழும்பு நோக்கி பயணித்தது.

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .