2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தமிழக மீனவர்களுக்கு விடுதலை

Janu   / 2024 ஜனவரி 29 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து  மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் ஜனவரி 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட  10  இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (29)   வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 9 மாதங்கள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் அவர்கள் இவ்வாறு விடுதலை செய்துள்ளதுடன் குறித்த மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட படகினை அரச உடமையாக்குமாறு நீதிவான் பொன்னுத்துரை கிருசாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் மீனவர்களிடையே கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசி உள்ளிட்ட வேறு உடமைகளை மீள வழங்குமாறும் விடுதலை செய்யப்பட்ட 10 மீனவர்களையும் மிரிஹான முகாமிற்கு அனுப்பி, இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படகின் உரிமையாளருக்கான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X