2025 மே 15, வியாழக்கிழமை

தீக்கிரையான வீடு புனரமைக்கும் நடவடிக்கை

Freelancer   / 2023 ஜூலை 05 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

றொசேரியன் லெம்பேட்

மன்னார்  தோட்டவெளி பகுதியில் கடந்த வாரம் குடிசை வீடு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டதன் காரணமாக முழு வீடும் எரிந்து நாசமாகி இருந்தது.

குறித்த குடும்பம் மிகவும் வறுமை பட்ட நிலையில் வாழ்ந்து வந்ததுடன் 7  மற்றும் 9 ஆம் தரத்தில் கற்கும் இரு பிள்ளைகள் உட்பட அக் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எரிந்த வீட்டை கூட சரிபடுத்த முடியாத நிலையில் பலரிடம் உதவி கோரியிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த கோரிக்கையை ஏற்று மன்னார் தமிழரசு கட்சியின் கிளை தலைவரும் சட்டத்தரணியுமான S. டினேஸனின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த குடும்பத்தின் வீட்டின் கூரை அமைப்பதற்கு உதவிகள் வழங்கப்பட்டது 

மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் இணைந்து மேற்கூரை அமைப்பதற்கான பொருட்களை அக் குடும்பத்திற்கு  செவ்வாய்க்கிழமை(4) வழங்கி வைத்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .