Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Janu / 2024 ஜனவரி 29 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய ரீதியில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு சுதுமலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் சனிக்கிழமை (27) நடைபெற்றது.
இந் நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து, மங்கல இசை வாத்தியங்கள் முழங்க அவர்களை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்று, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
பின்னர் வரவேற்பு நடனம் , விருந்தினர்களின் உரைகள் , இளைஞர் யுவதிகளின் கலைநிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. பின்னர் தேசிய ரீதியில் சாதனை புரிந்த வடக்கு மாகாண இளைஞர் யுவதிகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ளதுடன் சிறப்பு விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் பசிந்து குணவர்தன, யாழ்ப்பாண இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர்கள், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago