Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Janu / 2024 ஜனவரி 29 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபட்டிருந்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவரை கடற்படையினரால் மீட்டு கரை சேர்த்துள்ள சம்பவமொன்று சனிக்கிழமை (27) பதிவாகியுள்ளது.
மயிலிட்டி கடல் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது 2 வயது பிள்ளையையும் , தனது சகோதரியின் 7 வயது மகளையும் படகில் ஏற்றி கடலில் ஆபத்தான முறையில் படகை செலுத்தியுள்ளார். அதன் போது , படகினுள் கடற்தண்ணீர் உட்புகுந்ததுடன் , படகில் இருந்த பிள்ளைகளும் பயத்தில் கத்தியுள்ளனர்.
இச் சம்பவத்தை கடலில் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் கவனித்ததையடுத்து அவ்விடத்திற்கு விரைந்து , படகில் இருந்து பிள்ளைகளை மீட்டுள்ளதுடன் , படகினை கரைக்கு செலுத்துமாறு கூறி கரை சேர்ந்த பின்னர் குடும்பஸ்தரை கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இச் சம்பவத்தின் போது படகோட்டிய குடும்பஸ்தர் மது போதையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago