2025 மே 15, வியாழக்கிழமை

பொலிஸார் மீது தாக்குதல் ; பெண்கள் உட்பட 10 பேர் கைது

Janu   / 2023 ஜூன் 26 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சனிக்கிழமை (24)  மன்னார்- மதவாச்சி பிரதான வீதியில் உள்ள  உயிலங்குளம் மதுபானசாலை அருகில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டதாக  பொதுமக்கள் உயிலங்குளம் பொலிஸாருக்கு தகவல்  தெரிவித்ததை அடுத்து   போலிஸார் உயிலங்குளம் மதுபான சாலைக்கு சென்று விசாரணை செய்துள்ளனர்.

இதன் போது  அவ்விடத்தில்  கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் சிலரை பொதுமக்கள் போலிஸாருக்கு கூறியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்ய முற்பட்ட போது அவ்விடத்தில் நின்ற சிலர் பொலிஸாரை தாக்கி உள்ளார்கள்.

  தாக்குதலில் காயமடைந்த பொலிஸார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும்  தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள்  9 பேர் ஞாயிற்றுக்கிழமை  (25) உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்  குறித்த சந்தேக நபர்களை  மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதை தொடர்ந்து குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க  பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .