Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Janu / 2023 ஜூலை 09 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
சனிக்கிழமை ( 08 ) மாலை முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் உள்ள மலசல குழியினை துப்பரவு செய்யும் போது அதில் இருந்து வெடிபொருட்கள் சில இனம் காணப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் குழியினை பார்வையிட்டு அடையாளப்படுத்தியுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பு போட்டுள்ளார்கள்.
சம்பவம் குறித்து எதிர்வரும் திங்கட் கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு குறித்த வெடிபொருட்களை அகற்றும் நடவடிக்கை இடம்பெறும் என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மலசல குழியில் கைக்குண்டுகள் மற்றும் எறிகணை வகை வெடிபொருட்கள் இனம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago