2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

முதிரை மரப்பலகையுடன் ஒருவர் கைது

Freelancer   / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புன்னைநீராவி பகுதியில் மரப்பலகைகள் இருப்பது தொடர்பில் வனஜீவராசிகள்  திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து விசேட அதிரடிபடையினரால் சோதனை செவ்வாய்க்கிழமை (01) மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல இலட்ச ரூபாய் பெறுமதியான முதிரை பலகைகள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளதுடன்  தடையப்பொருட்கள் நீதிமன்றில்  புதன்கிழமை (02)  ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X