Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜனவரி 31 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நானாட்டானில் பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் புதன்கிழமை (31) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அரிப்புத்துறை பகுதியிலிருந்து வங்காலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நானாட்டான் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து அரிப்பு துறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியே இவ்வாறு விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தின் போது அரிப்பு துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளில் பெண்ணொருவரும் குழந்தை ஒன்றும் பயணித்துள்ளதுடன் குறித்தபெண் காயமடைந்துள்ளதாகவும் குழந்தை காயம் எதுவுமின்றி தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
காயமடைந்த தாய் மற்றும் மகள் இருவரும் அருகில் உள்ள நானாட்டான் பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.றொசேரியன் லெம்பேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .