2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யாழில்.முவர் கைது

R.Tharaniya   / 2025 மார்ச் 12 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவ​​ரை கைது செய்துள்ள பொலிஸார் அவர்களிடம்  இருந்து பயங்கரமான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.

கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகாமையில் கடந்த வாரம் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவருடைய கை விரல் வெட்டி விழுந்திருந்தது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் தொடர்பில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதற்கமைய சந்தேக நபர்கள் மறைந்திருக்கும் இடங்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில்  குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் கெலும் பண்டார  தலைமையிலான சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம்  மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்களிடமிருந்து வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு சந்தேக நபர் சட்டதரணியூடாக சரணடைந்துள்ளார். இவர்களிடமிருந்தும் வாள்களும் மோட்டார் சைக்கிலும் மீட்கப்பட்டுள்ளது.

நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X