2024 மே 02, வியாழக்கிழமை

யாழ். போதனா விடுதியில் இடம் இல்லை

Niroshini   / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனோ சிகிச்சை விடுதிகள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகள் ஆகியவற்றில், கோவிட்-19 சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருpன்றன.

இந்த நிலையில், நேற்று  (30) நிலைவரம் படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், 129 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன், அங்கு அமைக்கப்பட்டுள்ள 2 அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில், 10 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ள நிலையில், தினமும் 5 சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அந்தச் சடலங்கள், கோம்பயன் மணல் மயானத்தில் சுகாதார விதிமுறைகளின் கீழ் எரியூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .