2025 மே 16, வெள்ளிக்கிழமை

வட இலங்கை தனியார் பஸ் சங்கம் பூரண ஆதரவு

Freelancer   / 2023 ஏப்ரல் 24 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நாளை (25) இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைமையத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற கூட்டத்தின் போதே  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. 

குறித்த கூட்டத்தில் வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் சி. சிவகரன், யாழ் பிராந்திய கூட்டு இணைக்கப்பட்ட பஸ்  கம்பனிகளின் இனையத்தின் தலைவர் பொ.கெங்காதரன், முல்லைத்தீவு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நா. சற்குணராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பு. நாகரூபன், வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். ரி. ராஜேஸ்வரன், கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தி. கிருஷ்ணன் ரூபன் ஆகியோர் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .