2025 மே 01, வியாழக்கிழமை

வடக்கு மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு “Education யாழ்ப்பாணம்”

Editorial   / 2025 ஜனவரி 21 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ICFS (International Centre for Foreign Studies) சர்வதேச வெளிநாட்டு கற்கை மையம் ஏற்பாடு செய்துள்ள " Education யாழ்ப்பாணம்" ஏழாம்  அமர்வு ஜனவரி 25ம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை Hotel Jetwing Jaffna வில்  இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு வடக்கு மாகாணத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு  இங்கிலாந்து ,அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, , கனடா, மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் உள்ள கல்வி தொடர்பான தெரிவுகளையும், விருப்பங்களையும் ஆராய்வதற்கான வாய்ப்புகளை வழங்கும் முயற்சியின்  ஏழாவது  கட்டமாகும்.

"Education யாழ்ப்பாணம்" நிகழ்ச்சித் திட்டத்தின் சிறப்பு அம்சம் தலைநகர் மற்றும் கற்கை வசதிகளை கொண்ட பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கல்வி வாய்ப்புகளை, வடக்கு மாகாணத்திலுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுடன் பகிர்ந்து கொள்வதேயாகும். இலங்கையர் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க ICFS எப்போதும் உறுதிபூண்டு செயலாற்றி வருகின்றமை குறிப்பிடக்கூடியதாகும். இம்முறை விஷேடமாக  ICFS உடன் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்காக 1000 GBP புலமைப்பரிசில்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது

இங்கு முதன்மைப்படுத்தப்படுகின்ற கற்கைகளுக்காக நாடுகள் பாரிய பணச் செலவுகளை ஏற்படுத்தாத வகையிலும், நிதி பங்களிப்புகள் சலுகை அடிப்படையில் வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் அறிமுகப்படுத்துகின்றன. குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்கள், விண்ணப்பதாரர்களின் வசதியைக் கருத்திற் கொள்வதுடன் இந்தச் சந்தர்ப்பம் “Education யாழ்ப்பாணம்” மூலம் கிடைக்கும் தனித்துவமான வாய்ப்புகளாகும்.

இலங்கையில் தங்களுடைய குடும்பத்தை விட்டு வெளியேறத் திட்டமிடாத அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் Research Master options அவர்கள் சார்ந்து நிற்கின்றவர்களுடன்  (Dependent Visa) இங்கிலாந்துக்குச் செல்லும் வாய்ப்பை அவர்கள் அறிமுகப்படுத்த முனைகின்றார்கள்.

ICFS வடக்கில் உள்ள அனைத்து திறமையான மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அரிய வாய்ப்பை அதிகபட்சமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது.

அங்கு நீங்கள் இது தொடர்பிலான தொழில் வல்லுநர்களைச் சந்தித்து ICFS உடன் வெளிநாட்டில் கல்வியைத் தொடர உங்கள் எதிர்கால இலக்கை அடைவதற்கான வரைவை இங்கு சமர்ப்பிக்க முடியும். ICFS இன் இந்த செயலமர்வுக்கு எந்தவித நுழைவுக் கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது என்பதையும், ICFS இன் ஆலோசனைகளுக்கு எவ்வித கட்டண வசூலிப்பும் இல்லை (No consultant fees) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வடக்கில் உள்ள தகுதியான மாணவர்களுக்கு ஒரு விலைமதிப்புல்ல வாய்ப்பாக அமைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .