2025 மே 15, வியாழக்கிழமை

வழமைக்கு திரும்பிய கடற்பாதை சேவை

Freelancer   / 2023 ஜூலை 11 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ். தில்லைநாதன்

காரைநகர் - ஊர்காவற்துறை கடற்பாதையானது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடலில் உடைந்து விழுந்தது. இதனால் காரைநகரில் இருந்து ஊர்காவற்துறைக்கும், ஊர்காவற்துறையில் இருந்து காரைநகருக்கும் பயணம் செய்யும் அரச உத்தியோகத்தர்கள், அன்றாட தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த கடற்பாதையின் புனரமைப்பு பணிகள் கடந்த சனிக்கிழமை நிறைவுற்ற நிலையில் திங்கட்கிழமையில்(10) இருந்து  வழமையான நேர அட்டவணையின்படி கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திரு. பாலச்சந்திரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .