2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வவுனியாவில் 41 பேருக்கு எலிக்காய்ச்சல்

Janu   / 2025 ஜனவரி 05 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. 

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை சிறுபோகம் மற்றும் பெரும் போகம் போன்ற நெற் பயிர் செய்கை காலங்களில் எலிக்காய்ச்சல் தொற்று கடந்த காலங்களில் குறிப்பிட்டளவு பதிவாகியிருக்கிறது. 

எனினும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குணமடைந்து  தற்போது வீடுகளுக்கு சென்றுள்ளனர் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

க. அகரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X