2025 மே 15, வியாழக்கிழமை

வாள்களுடன் இளைஞர் கைது

Janu   / 2023 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கோண்டாவில் மேற்கு, புகையிரத நிலைய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து இளைஞன் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்  வீட்டை சோதனையிட்டு, சுவாமியறையில் வைக்கப்பட்டிருந்த 2 வாள்களையும் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன், மேலதிக விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைதான இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் கோண்டாவில் கிழக்கு ஐயப்பன் ஆலய வருடாந்த உற்சவத்தின் சமய சடங்குகளுக்காக மேற்படி வாள்களை கொள்வனவு செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.    

எஸ் தில்லைநாதன்

எஸ் தில்லைநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .