2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விலங்குகள் மற்றும் மருந்துகளுடன் மூவர் கைது

Janu   / 2025 பெப்ரவரி 05 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்ட   விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து  படகு மூலம் தலைமன்னார் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி பறவைகள்,விலங்குகள் மற்றும் மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மன்னார், பேசாலை பகுதியில்   செவ்வாய்க்கிழமை(4) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்ட விரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட   புறாக்கள் (PIGEONS) , ஆப்பிரிக்க காதல் பறவைகள் (AFRICAN LOVE BIRDS), பறக்கும் அணில்கள் (FLYING SQUIRRELS) மற்றும் மருந்து தொகைகளுடன் லொறியில் பயணித்த மூவர்   கைது செய்யப்பட்டனர்.

இதன் போது குறித்த லொறியில் 220 புறாக்கள், 20 ஆப்பிரிக்க காதல் பறவைகள், 08 பறக்கும் அணில்கள் மற்றும் 30 மருந்து மாத்திரைகள், மருந்து திரவங்கள் அடங்கிய 40 போத்தல்கள், கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தம்புள்ளை மற்றும் கொழும்பில் வசிக்கும்’ 25 மற்றும் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட  விலங்குகள், லொறி மற்றும் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

 எஸ்.ஆர்.லெம்பேட்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X