2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அத்துமீறி குடியேறிய குற்றச்சாட்டில் கைதான 10 பேரும் விடுதலை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 31 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, லகுகல பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இலங்கை விமானப்படை முகாமுக்குச் சொந்தமான காணியில் அத்துமீறிக் குடியேறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 10 பேரையும் அக்குற்றச்சாட்டிலிருந்து பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாஹாப்தீன், புதன்கிழமை (30) விடுவித்துள்ளார்.

மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று குடியிருக்கும் காணிக்குரிய அனுமதிப்பத்திரங்களையும் மற்றும் ஆவணங்களையும் பெற்றுக்கொள்ளுமாறும்  இவர்களுக்கு நீதவான் பணித்துள்ளார்.

மேற்படி பிரதேசத்தில் அமைந்திருக்கும் இலங்கை விமானப்படை முகாமிலிருந்து சுமார் 1.5 கிலோமீற்றர் தூரத்திலுள்ள  அரசாங்கக் காணியில் சம்மந்தப்பட்ட நபர்கள் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்தக் காணியில் வசித்துவரும் இவர்களை இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான காணியெனத் தெரிவித்து, அத்துமீறிக் குடியேறியுள்ளதாக புதன்கிழமை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

இருப்பினும், இவர்கள் வசித்துவரும் குறித்த காணியானது குடியிருப்புக் காணி இல்லாத மக்களுக்கு அரசாங்கத்தால் பிரித்து வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியெனத் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .