2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்துக்களில் ஒருவர் மரணம்; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, எப்.முபாரக்

அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்ததுடன், மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை, பாணமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உத்திரபுரத்தை சேர்ந்த தங்கர்; பத்மஸ்ரீ (வயது 30) என்பவர் மரணமடைந்த அதேவேளை, த.ஜயசிங்க (வயது 35) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாணாமை கிராமத்திலுள்ள கோவிலொன்றில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் இவர்கள் இருவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன்போது, இவர்களின் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பமொன்றுடன் மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.  

இவர்கள்; இருவரும் மதுபோதையில் இருந்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார்; கூறினர்.
இது இவ்வாறிருக்க திருகோணமலை, ஹபரன ஹதரஸ்கொட்டுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இருவர் ஹபரன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.                                

கந்தளாயிலிருந்து தம்புள்ளைக்கு பயணித்துக்கொண்டிருந்த லொறியும் ஹபரனையிலிருந்து திருகோணமலைக்கு பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே மோதியது.

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பஸ்ஸொன்றை முந்திச்செல்ல முற்பட்டபோது, எதிரே வேகமாக வந்துகொண்டிருந்த லொறியுடன் மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.

ஹபரன பகுதியைச் சேர்ந்தவர்களே காயமடைந்துள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, லொறியின் சாரதியை தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் கூறினர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .