2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமைச்சர் ஹக்கீமின் விஜயத்தை தடுப்பதற்காக டயர்கள் எரிப்பு

Super User   / 2011 மார்ச் 05 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

அக்கரைப்பற்று பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த வேட்பாளரின் வீட்டுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் சென்ற போது மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தும் வகையில் டயர்களை எரித்த சம்பவம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

எனினும் குறித்த பிரதேசத்திலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவர்கள் டயர்களை அகற்றி ரவூப் ஹக்கீமை குறித்த பிரதேசத்திற்கு வரவேற்றுள்ளனர்.

அதனையடுத்து அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றும் போது இடைஞ்சல் ஏற்படுத்து வகையிலும் மேற்படி மாற்று கட்சி ஆதரவாளர்கள் செயற்பட்டுள்ளனர்.

இதேவேளை, அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துக்கும் வகையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட கூட்டத்திற்கும் இடையூறு விளைவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • Amjath Saturday, 05 March 2011 11:09 PM

    இனி டயர் மட்டுமல்ல முழு அக்கரைபற்றுமே

    'பயத்தால் எரியும்' !!!

    தெரியுமில்ல.... !!!

    Reply : 0       0

    mi aaseek Sunday, 06 March 2011 12:32 AM

    எல்லா டயர் எரிப்புகளும் பதினேழாம் திகதியுடன் அடங்கும்.

    Reply : 0       0

    mohamed rihas Sunday, 06 March 2011 01:05 AM

    SLMC ORUWARALUM ALLIKAMUDYHTU

    Reply : 0       0

    mamasfak Sunday, 06 March 2011 02:00 AM

    என்னடா புதுக்கதையா கிடக்கு அக்கரைபத்துக்கு ஒருவரும் வரக்கூடாது. அதாவுல்லா எல்லா இடத்துக்கும் போகலாம்.

    Reply : 0       0

    Mohammed, Maruthamunai Sunday, 06 March 2011 03:19 AM

    அரசியலே ஒரு சாக்கடை. எல்லாம் ஒரு குட்டையில் பழுத்த மட்டைகள் தான்.

    Reply : 0       0

    Dr. Rumi Sunday, 06 March 2011 02:53 PM

    Politicians should not behave like this or should not allow supporters to act in this manner. Politics is a not a permanent job, politicians might come and go. If politicians think that they should stay in the scene, that is a dangerous example. Even Minister Hon. Atahulla cannot be held responsible for these acts, it is his responsibility to control his supporters.

    Reply : 0       0

    s.athem bhawa Sunday, 06 March 2011 03:29 PM

    சமூகத்துக்கு காட்டும் வழி இதுதானா?

    Reply : 0       0

    irsha Sunday, 06 March 2011 05:17 PM

    nadappathellm nadakkeddum. iraiven thunai nallaverhelukku.

    Reply : 0       0

    lmsarjoon Monday, 07 March 2011 12:51 AM

    ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் அக்கரைபற்றுக்கு மட்டும் கட்சியை வைத்துக் கொண்டு ஜனநாயகத்தை மீறகூடாது.

    Reply : 0       0

    ramlan Tuesday, 08 March 2011 02:11 AM

    ellarum onraka irunthu anru seithathai inru pirinthu ninru alukku aal seikirarkal. ithuthan islamiyak kadchikkararkaludaiya valimuraiya?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .