2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'கல்முனை மாநகர சபை மு.கா கைப்பற்றினால் மாகாண சுகாதார அமைச்சர் சுபைர் இராஜினாமா செய்வாரா?'

Super User   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.எம்.ஜெஸ்மின்)

கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பதவியை இராஜினாமா செய்வாரா என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் எம்.சிராஸ் சவால் விடுத்துள்ளார்.

வேட்பாளர் எம்.சிராஸின் விஞ்ஞாபன வெளியிடலும் ஊடகவியலாளர் சந்திப்பும் இன்று புதன்கிழமை சாய்ந்தமருதில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு மாகாண அமைச்சர் சுபைருக்கு சவால் விடுத்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து அன்மையில் இடம் பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கல்முனை மாநகர சபையை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்ற நாங்கள் விடவும் மாட்டோம் என மாகாண அமைச்சர் சுபைர் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் கூறியதற்கு மாறாக கல்முனை மாநகர சபை தேர்தலில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வாரா என கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தது போன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கல்முனை மாநகர சபையின் ஆட்சியை கைப்பற்றினால் நான் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் என்றார்.


You May Also Like

  Comments - 0

  • rozan Thursday, 29 September 2011 10:15 AM

    நோ கமெண்ட்ஸ் சார்...அண்ட் டாக்டர் .......

    Reply : 0       0

    firas Sunday, 02 October 2011 06:15 PM

    riyal A.M, kaleel பொறுத்திருந்து பார்போம். சில நாட்களே எஞ்சியுள்ளது.

    Reply : 0       0

    Riyal A.M Saturday, 01 October 2011 05:14 PM

    ஆரம்பத்தில் நீங்கள் நன்றாக சென்றீர்கள் .... இப்போது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது ...!!

    Reply : 0       0

    kaleel Saturday, 01 October 2011 02:11 PM

    நல்ல கூட்டம் உங்களை சுத்தி நிக்கிறார்கள் உருப்பட்ட மாதிரித்தான். இவர்களைத்தான் நான் சேர்த்த கூட்டம் என்று மேடையில் பேசினீர்களோ?

    Reply : 0       0

    azeem Friday, 30 September 2011 07:56 PM

    அரசியல் என்பது பட்டம் மட்டும் போதாது. அனுபவமும் வேண்டும்.

    Reply : 0       0

    firas Friday, 30 September 2011 05:53 PM

    sainthamaruthan சிராஸ் எப்போதும் யாரையும் குறிப்பிட்டு குறை கூற வில்லை. பல உள்ளூர் சதி காரர்கள் அவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்கள். அதை முன்பு புரிந்து கொள்ளவும். களத்தில் முத்த போராளிகள் இருந்தால் அவர்கள் நல்ல அரசியல் வாதியாகவும் மற்றும் இல்லாமல் ஒரு அரசியல் உதாரணமாகவும் இருக்க வேண்டும்.

    Reply : 0       0

    aswan Friday, 30 September 2011 02:16 AM

    தம்பி சிராஸ், உங்கட விஞ்ஞாபனம் நன்று. நீங்க டாக்டர் பட்டம் பெற எழுதின ஆய்வு நூலையும், முதுமானிப்பட்டம் பெற்ற ஆய்வைவையும் வெளியிட்டால் உங்கட தகுதி எல்லாருக்கம் நன்றாக விளங்கும். அதற்குப் பிறகு நீங்கதான் நம்மட மேயர். சுவர்.

    Reply : 0       0

    abdul Friday, 30 September 2011 02:12 AM

    சாய்ந்தமருது மக்கள் எவ்வளவு பெருந்தன்மையடையவர்கள். நமது பாரம்பரியம் பெருமைமிக்கது. அதனை உங்கள் பணத்தைக்கொண்டு வீணடித்துவிடாதீர்கள். பிரதேசவாதத்தைக் கக்கி பதவி பெற நினைக்கறீங்க. ஆனால், நாங்கள் பிரதேசவாதிகள் அல்ல. உங்களைச் சுற்றியிருப்பவங்க 10ம் திகதிவரை மட்டும்தான். பிறகு நீங்கள் நடுத்தெருவில். தயவுசெய்து அல்லாஹ்வை மறந்து, பணத்தை நம்பி, நம்ம சமூகத்தை பிரிவினையை ஏற்படுத்த நினைக்காதிங்க. அல்லாஹ்வின் பிடி கடுமையானது. குட்டி ஆடு குடலேறக் கொழுத்தாலும் வழுக்கல் வழுக்கல்தான்.

    Reply : 0       0

    sainthamaruthan Thursday, 29 September 2011 03:05 PM

    தம்பி சிராஸ்! நீங்க அரசியலுக்கு வரக்குள்ள நாங்க மிச்சம் சந்தோசப்பட்டம்.
    உங்கட வரவு வித்தியாசமா இருக்கும் என எதிர்பார்த்தோம் ஆனா நீங்களும் சாதாரண அரசியல் வாதி ஆகிட்டிங்க. உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்த்தோம். இப்ப உங்களை சுத்தி இருக்கிற கூட்டத்த கொஞ்சம் யோசித்து பாருங்க ...... சவால் விடுற அரசியல் இப்ப சரி வராது நீங்க இப்ப அரசியலுக்கு புதிசு என்பத மறந்திடாதிங்க. உங்கட பட்டியல்ல முதிர்ந்தவர்களும் இருக்கிறாங்க. அவங்களுக்கும் மதிப்பு கொடுங்க.

    Reply : 0       0

    Nafeel Wednesday, 28 September 2011 08:13 PM

    தம்பி இன்னும் அரசியலுக்கு உள்ளுக்கு வரவே இல்ல ஒதுங்குவேன் என்றா எப்படி? இன்னம் எத்தன பாடம் படிக்கணும்.

    Reply : 0       0

    riyas Thursday, 29 September 2011 05:14 AM

    குடும்பத்தோடு களமிறங்கிட்டீங்களா?...... ஐயா......

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 29 September 2011 03:49 AM

    இங்கு கொமண்ட் பன்னும் அனைவரும் சரியாகா பெயரைப் பாருங்கள் அவரு சிறாஸ். நாந்தான் சிறாஜ்.
    எனவே சரியாக பெயருக்கு எழுதுங்கள். ஆனால் மேயர் சிராஸ் தம்பிக்கு இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. எதற்கும் 9ஆம் திகதி விளங்கும் அதுக்கு பிறகு நான் சொல்கிறேன் யாரு மேயர் என்று.

    Reply : 0       0

    ziyath Thursday, 29 September 2011 02:34 AM

    தம்பி சிராஜ் இன்னமும் சின்ன பிள்ளை.
    உங்களுக்க படிக்க அவ்வளவு பாடம் காத்துகிடக்கு.
    மேயர் கனவு வாண்டாம் உங்களுடன் குத்து போடும் உங்கள் அல்லகைகள் உங்கள் பவுண்ட்ஸ் முடியும்வரைகும் தான் .....

    Reply : 0       0

    mca fareed Thursday, 29 September 2011 02:29 AM

    சிலர் மூளைக்கும் முன்நானுக்கும் தொடர்பில்லாமல், கதைப்பது உண்டு.

    Reply : 0       0

    rase kalmunai Thursday, 29 September 2011 01:13 AM

    பணம் பாதளம் மட்டும் பாயும் என்பதனை தம்பி சிராஜ் கவனத்தில் கொள்ளவும்.

    Reply : 0       0

    siraj Wednesday, 28 September 2011 10:02 PM

    முஸ்லீம் காங்கிரசைப் பற்றி இன்று குறை கூற எந்தவொரு அரசியல் வாதிக்கும் எந்த தகுதியும் இல்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    ஏன் என்றால் அரசியலைக்கற்றுக்கொடுத்த இக்காங்கிரசைப் பற்றி தப்பாகப் பேச முன்வருபவர் யார் அவரைப்போல துரோகி உலகில் யாரும் இருக்க முடியாது என்பதே உன்மை.

    Reply : 0       0

    siraj Wednesday, 28 September 2011 10:00 PM

    சரியானதொரு விளக்கம் அளித்துள்ளார் தம்பி சிராஸ்.
    ஏன் என்றால் ஏராவூரைச் சேர்ந்த கிழக்குமாகான அமைச்சர் கல்முனைக்கு வந்து சவால் விட என்ன தைரியம் என்று கேட்கிறோம்.
    அமீர் அலியில் பசை வாளியைத்தூக்கி திரிந்துவிட்டு மாகான சபையில் ஆளில்லாமல் ஒரு இடத்தைக்கொடுத்து அட்டையை பிடித்து மெத்தையில் வைத்தது போன்று வைத்திருக்கார்கள். அதுக்குள் முஸ்லீம் காங்கிரசை விரட்டுவோம் என்று சவால் விட்டாராம் ஆஹா இது நல்லா இருக்கே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .