2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீட கட்டிடத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு

Kogilavani   / 2011 நவம்பர் 28 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா, அப்துல் அஸீஸ்)

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்துக்கான விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான விடுதி, பீடக்கட்டிடம் என்பவற்றை நிர்மாணிப்பதற்கான அங்குரார்பண வைபவம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எஸ்.சபீனா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்களான எம்.ரீ.எம்.ஷஹீட், ஏ.எம்.நபீல், பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பர், பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.ஏ.சத்தார், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் சிரேஷ;ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஸ்தபா, மத்தியஸ்த்தசபை தலைவர் எஸ்.எச்.ஏ.றாசீக் உட்பட பீடாதிபதிகள்,  விரிவுரையாளர்கள், திணைக்கள தலைவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

உயர் கல்வி அமைச்சின் 319 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இவ் வேலைத்திட்டம் மத்திய பொறியியல் ஊசாத்துணை பணியகத்தின் (சீ.ஈ.சீ.பி) நிபுணத்துவ உதவியுடன் சிசிற கட்டிட நிறுவனத்தின் மூலம் ஒரு வருட காலத்தினுள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0

  • Doc - KSA Monday, 28 November 2011 08:15 PM

    Good move. Students have been suffering since long time. Appreciations to those who involved in this efforts.

    Reply : 0       0

    kalmunaiyaan Monday, 28 November 2011 09:07 PM

    என்ன நடந்ததது பகிடிவதை செய்த மாணவர்களுக்கு....?

    Reply : 0       0

    nazirahamed MN Tuesday, 29 November 2011 12:10 PM

    இது சபிநாவின் காலத்தில் அல்ல . இது எப்போவோ தீர்மானிக்கப்பட்டது ............ அது டம்மி .........

    Reply : 0       0

    SEUSL Tuesday, 29 November 2011 07:10 PM

    யாருடைய காலத்தில் நடந்தால் என்ன? விமர்சனத்தை விடுத்து ஆகவேண்டிய வேலைகளை பாருங்க. இததனை வருடத்தில் உங்கள் பீடத்தில் பாடவிதானங்கள் எததனை முறை தொழில் சந்தைக்கு உகந்தவாரு திருத்தி அமைத்து உள்ளீர்கள். எல்லாரும் ஆய்வும் உழைப்பும்தான். ஹ ஹா...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .