2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதேச சபை தவிசாளரின் நியமனத்துக்கு எதிர்ப்பு

Super User   / 2012 நவம்பர் 12 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளரின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனத்தை எதிர்த்து உதவி தவிசாளர் தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை நாவிதன்வெளி பிரதேச சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக செயற்பட்ட கலையரசன் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, ஏற்பட்ட தவிசாளர் வெற்றிடத்திற்கு பிரதேச சபை உறுப்பினரான சிவலிங்கம் குணரட்ணத்தின் பெயரை மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்திருந்தது.

இதனால், நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிவலிங்கம் குணரட்ணத்தின் பெயர் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சிவலிங்கம் குணரட்ணத்தின இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்நிலையில்புதிய தவிசாளரின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உப தவிசாளரான அமரதாச ஆனந்தன் தலைமையிலான குழுவினர் பிரதேச சபைக்கு முன்னால் காலை 11 மணி தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒழிக, கலையரசனின் கபட நாடகத்தில் குணரட்ணம், போன்ற சுலோகங்களும் கோஷங்களும் எழுப்பியவாறு சுமார் 50 பேர் இந்த  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக புதிய தவிசாளர் சிவலிங்கம் குணரட்ணம் தெரிவிக்கையில்,

"எனக்கான இந்த நியமனம் கட்சியினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆர்பாட்டம் தொடர்பாக கட்சியின் தலைமை பீடத்திற்கு தெரிவித்துள்ளேன். நான் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தமிழரசு கட்சியில் இருந்து செயற்பட்டு வருகின்றேன் என்றார்".(படங்கள்: ஜதுசன்)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .