2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம்

Kogilavani   / 2013 ஜூலை 24 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை தற்போது ஆரம்பித்துவிட்டது.

இம்முறை மாவட்டத்தில் 55,392 ஹெக்டெயரில் நெற்செய்கை பயிரிடப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் எம்.கலீஸ் தெரிவித்தார்.

சிறந்த காலநிலை மற்றும் நீர்ப்பாசன வசதி, உரமானிய விநியோகம், களைக்கட்டுப்பாடு, நோயின் தாக்கம் போன்றனவும் இம்முறை விவசாயிகளுக்கு சாதகமான முறையில் அமைந்ததனால் இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ள நெற்செய்கையிலிருந்து உச்ச விளைச்சல் எதிர்பார்க்கப்படுகின்றது.

அறுவடை இயந்திரம் மூலமே அதிகளவில் நெல் அறுவடை இடம்பெற்று வருகின்றது.

ஏக்கர் ஒன்றுக்கான அறுவடைக் கூலியாக ரூபா 5,000 முதல் ரூபா 6,000 வரையிலும் அறுவடை செய்யப்பட்;ட ஒரு மூடை நெல் ரூபா 1,650 மற்றும் ரூபா 1,700 வரை தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களினால் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .