2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'ஆக்கப்பூர்வமான துறைகளை மாணவர்கள் தெரிவுசெய்ய வேண்டும்'

Kogilavani   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


'எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்கள்  நன்கு சிந்தித்து ஆக்கப்பூர்வமான துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்' என தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் தெரிவித்தார்.

சம்மாந்துறை தேசிய பாடசாலையில் புனரமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் திறப்பு, 'அறுவடை'நூல் வெளியீடு மற்றும் 2012, 2013ஆம்     ஆண்டுகளில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான 25 மாணவர்கள் கௌரவிப்பு ஆகிய முப்பெரும் விழாக்கள் வியாழக்கிழமை (17) சம்மாந்துறை தேசிய பாடசாலையின் எம்.ஏ.அப்துல் மஜீட் ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை தேசிய பாடசாலையின் அதிபர் எச்.எம்.பாறுக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்,

'உலக நாடுகளை ஒப்பிடுகின்ற போது அரசாங்கம் கல்விக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. அதிலும் விசேடமாக இலவசக் கல்வியினை வழங்குகின்ற நாடுகளில் முதன்மை பெற்ற நாடாக இலங்கை காணப்படுகின்றது.

இது எமக்குக் கிடைத்த வரப்பிரசாதமாக கொண்டு நாம் ஒவ்வொருவரும் கல்வியில் நல்ல பிரஜைகளாகவும் அறிவு மற்றும் ஆய்வு ரீதியாகவும் முதன்மை பெற்றவர்களாக மாற வேண்டும்.

எமது நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது நாட்டை ஆசியாவின் ஆச்சர்யமிக்க வியப்புமிக்க நாடாக மாற்றியமைப்பதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றார். அதற்காக ஐந்து முக்கியத் துறைகளை தெரிவு செய்து அதற்கு கூடுதலான முக்கியத்துவத்தினை வழங்கி வருகின்றார்.

அதாவது கடல் போக்குவரத்துத் துறை, ஆகாய போக்குவரத்து, வர்த்தகத்துறை,  எரிசக்தி மின்சக்தி, கல்விதுறை என்பவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக எதிர்காலத்தில் கூடுதலான நிதிகள் இத்துறை சார்ந்த அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவுள்ளதுடன் அரசின் முழுக்கவனமும் அதன்பால் செலுத்தப்படவுள்ளது.

விசேடமாக இத்துறைகளை அபிவிருத்தி செய்ய கல்வித்துறை மூலமாக நல்ல அறிஞர்களை, நிபுணர்களை  உருவாக்கிக் கொள்ள பல்கலைக்கழகங்களில் பாரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் பல துறைகள் உள்வாங்கப்பட்டுள்ளன என மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .