2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சட்டவிரோதமாக விற்கப்படவிருந்த 420 உரமூடைகள் மீட்பு

Super User   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

                                                            (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)                              

சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான 420 உரமூடைகளை காரைதீவு விசேட அதிரடிப் படையினர் இன்று மாலை கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி உரமூடைகள் வீடொன்றில் அடுக்கி வைக்கப்பட்டிருந்து,  லொறி ஒன்றுக்கு மாற்றம் செய்யும் போது காரைதீவு விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காரைதீவு விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

கடந்த சிறுபோக வேளாண்மை செய்கையின்போது அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு அரசினால் மானிய அடிப்படையில் வழங்கப்பட்ட உரவகைகளை வேறு பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்காக, பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல தயாரான போதே இந்த உரமூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட உரமூடைகள் பறிமுதல் செய்த காரைதீவு விசேட அதிரடிப் படையினர், சந்தேகத்தின் பேரில் வீட்டு உரிமையாளரையும்  கைது செய்து கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.   

alt
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .