2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆண்டு நிறைவும் கௌரவிப்பு நிகழ்வும்

பைஷல் இஸ்மாயில்   / 2018 ஜனவரி 29 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் முதன் முதலாக தொற்றாநோய்க்காக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத தொற்றாநோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் முதலாவது ஆண்டு நிறைவு விழாவும், இவ்வைத்தியசாலையை உருவாக்குவதற்காக சகல வழிகளிலும் உதவி செய்தவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும், நாளை (30) நடைபெறவுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசிம் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார் என்பதுடன், ஏனைய திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதில் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.

2017ஆம் ஆண்டு முதலாம் மாதம் 28ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட இந்த வைத்தியசாலையில், இதுவரைக்கும் 25,025 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

அதுமாத்திரமல்லாமல் 2017ஆம் ஆண்டில் இடம்பெற்ற செயற்றிட்டங்கள் பற்றிய தொகுப்புடன், 2018ஆம் ஆண்டுக்கான விசேட செயற்றிட்ட முன்னெடுப்புகள் பற்றிய விவரத் தொகுப்பொன்றும், இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .