2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆயுர்வேத வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கீடு

Editorial   / 2017 செப்டெம்பர் 01 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் ஆயுர்வேத வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.

பொத்துவில் பகுதியில் சுமார் 55 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயர்வேத மத்திய மருந்தகம் நேற்று (31) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொத்துவில் ஆயுர்வேத மத்திய மருந்தகம் எதிர்காலத்தில் சகல வசதிகளுடன் கூடிய மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்தி நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறும் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் அடயாளம் காணப்பட்டு சுகாதார அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்தியை முன்கொண்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூடுதலான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .