2024 மே 09, வியாழக்கிழமை

11 ஆசனங்களுக்காக 112 வேட்பாளர்கள் களத்தில்

பைஷல் இஸ்மாயில்   / 2018 ஜனவரி 04 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, காரைதீவு பிரதேச சபைக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 11 ஆசனங்களை இலக்கு வைத்து 6 கட்சிகள் 2 சுயேச்சைகள் வாயிலாக 112 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

 

17 குறிச்சிகளை 7 வட்டாரங்களாகக்கொண்ட காரைதீவில் மொத்தமாக 12,972 வாக்குகள் உள்ளன. இதில் 04 தமிழ் வட்டாரங்களில் 7,944 தமிழ் வாக்காளர்களும் (61வீதம்) 03 முஸ்லிம் வட்டாரங்களில் 5,028 முஸ்லிம் வாக்காளர்களும் (39 வீதம்) உள்ளனர்.

கலப்பு முறைத்தேர்தலில் வட்டார முறைத்தேர்தல் மூலம் நேரடியாக 7 வட்டாரங்களுக்கும் 4 தமிழர், 3 முஸ்லிம்கள் உள்ளிட்ட 7 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

விகிதாசாரமுறை மூலமாக மீதி 4 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மொத்தமாக 11 பிரதிநிதிகள், காரைதீவுப்பிரதேச சபைக்காகத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X