2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

உருவப்படம் வெளியிடப்பட்டதையடுத்து மூவர் கைது

Editorial   / 2017 ஜூன் 08 , மு.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹரியானா, குல்கன் மாவட்டத்தில், 9 மாத சிசுவொன்றை முச்சக்கரவண்டியிலிருந்து வெளியே தூக்கியெறிந்துவிட்டு, அதனது தாயை வன்புணர்வுக்கு உட்படுத்திய மூவரின் உருவப்படங்கள் வெளியிடப்பட்டதையடுத்து, குறித்த மூவரும், மனேசர் எனும் கிராமத்தில் வைத்து, நேற்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.  

மேலும், குறித்த சம்பவம் தொடர்புடைய விசாரணைகளை சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், மனேசர் பொலிஸ் நிலையத்தின் பெண் உப பொலிஸ் கண்காணிப்பாளர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். 9 மாதக் குழந்தையை, முச்சக்கரவண்டியை விட்டு வெளியே வீசிக் கொன்றமை, மற்றும் கூட்டு வன்புணர்வு ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ், மூவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும், எனினும், விசாரணைகளின் பின்னரே, குற்றத்தை செய்தவர்கள் இவர்கள் தான் உறுதிப்படுத்த முடியும் என்றும், பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். 23 வயதுடைய குறித்த பெண், தனது கணவருடன் முரண்பட்டுக்கொண்டு, பெற்றோரின் வீட்டுக்குச் செல்வதற்காக, இரவு நேரம் முச்சக்கரவண்டியொன்றில் ஏறியுள்ளார். இதன்போது, முச்சக்கரவண்டியில் ஏற்கெனவே இருந்த இருவரும் சாரதியும் சேர்ந்து தன்னை வன்புனர்வுக்கு உட்படுத்தும் போது, குழந்தை அழுததாகவும் எனவே அக்குழந்தையை வெளியே வீசியதாகவும், பாதிக்கப்பட்ட பெண், தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .