2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக தாக்குதல்கள் நடத்தப்படும்; அமெரிக்காவுக்கு அல் கொய்தா எச்சரிக்கை

Super User   / 2010 ஜூன் 21 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கர்கள் இதற்கு முன்பு சந்தித்த தாக்குதல்களை விடவும் பலத்த தாக்குதல்களை விரைவில் நடத்துவோம் என அல்-கொய்தா அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆடம் கடாஹன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆடம் கடாஹன், அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்து வீடியோ ஒளிப்பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மாசசூசஸ்ட்ஸ் செனட் தேர்தலில் நீங்கள் (ஒபாமா) தோல்வியைச் சந்தித்துள்ளீர்கள். இதற்கு முன்பு நாங்கள் நடத்திய தாக்குதலை விட மிகக் கடுமையான தாக்குதலை விரைவில் உங்களது நாடு சந்திக்கும்.

நீங்கள் இதுவரை கொன்றுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையுடன், நாங்கள் நடத்திய தாக்குதலில் பலியான அமெரிக்கர்களை ஒப்பிட்டுப் பார்த்தால் நாங்கள் நடத்திய வேண்டிய தாக்குதல்கள் இன்னும் நிறைய உள்ளன என்பது தெளிவாகத் தெரியும்.

அதைச் சந்திக்கத் தயாராக இருங்கள். இனி நாங்கள் நடத்தும் தாக்குதல்கள் இதற்கு முன்பு நடத்தியவர்றை விட மிகக் கடுமையானதாக இருக்கும். இதற்கு முன்பு கொல்லப்பட்ட அமெரிக்கர்களை விட அதிக அளவிலான அமெரிக்கர்கள் அதில் உயிரிழப்பார்கள்.

அந்த நேரம் வரும் வரை நாங்கள் பொறுத்திருக்கப் போகிறோம். அதனால்தான் தற்போது அமைதியாக இருக்கிறோம், கட்டுப்பாடு காக்கிறோம். ஒரு வேளை இந்தப் போராட்டத்தில் அல்-கொய்தா தோற்றாலும் கூட கோடிக்கணக்கான முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடருவார்கள்.

அதிபர் ஒபாமா தனது பெயரில் முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக விஷப் பாம்பு போல செயல்படுகிறார். உங்களுக்கு முன்பு இருந்த செல்வாக்கு இப்போது இல்லை. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த ஒபாமாவாக இப்போது நீங்கள் இல்லை.

எங்களுடன் நீங்கள் சமரசமாக போக வேண்டும் என்று விரும்பினால் இஸ்ரேலுடனான உறவை முற்றிலும் வெட்டி விட வேண்டும். ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும்." என்று அதில் எச்சரிக்கை விடுத்துல்ளார் கடாஹன்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .