2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’சூறாவளிகள் மீது அணுகுண்டுகள் போட ஆலோசிக்கும் ட்ரம்ப்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் சூறாவளிகள் தரையிறங்கும் முன் அவற்றின் மீது அணுகுண்டுகளைப் போடுவது குறித்து ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆலோசித்ததாக அக்ஸியொஸ் இணையத்தளம் நேற்று  செய்தி வெளியிட்டுள்ளது.

சூறாவளி தொடர்பான கலந்துரையாடலில், ஆபிரிக்கக் கரையோரத்தில் உருவாகும் சூறாவளிகளை, அவற்றின் மய்யம் மீது அணுகுண்டொன்றை போடுவதன் மூலம் குழப்ப முடியுமா என்று ஜனாதிபது டொனால்ட் ட்ரம்ப் வினவியதாக அக்ஸியொஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அநாமதேய தகவல் மூலத்தின் மூலம் இதற்கு தாங்கள் என்ன செய்யலாம் என கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் யோசித்ததாக அக்ஸியொஸ் மேலும் கூறியுள்ளபோதும் குறித்த கலந்துரையாடல் எப்போது இடம்பெற்றது எனக் கூறியிருக்கவில்லை.

இவ்வாறாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பது முதன்முறையல்ல. 2017ஆம் ஆண்டில், சூறாவளிகள் தரையிறங்குவதைத் தடுப்பதற்கு தனது நிர்வாகம் குண்டு வீசலாமா சிரேஷ்ட அதிகாரியொருவரை வினவியிருந்தார். அக்கலந்துரையாடலில் அணுகுண்டுகள் பயன்படுத்தப்படுமா என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருக்கவில்லை.

இந்நிலையில், இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டம் தவறானதல்ல என சிரேஷ்ட நிர்வாக அதிகாரியொருவர் தெரிவித்ததாக அக்ஸியொஸ் தெரிவித்துள்ளது.

இக்கருத்தானது 1950களில் அரசாங்க விஞ்ஞானியொருவரால், முன்னாள் ஜனாதிபதி டிவைட் ஐன்ஸ்ஹவரின் கீழ் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .