2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா - இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை

Super User   / 2010 நவம்பர் 08 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும்இ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்று காலை ஆரம்பமாகின.

நேற்றுமுன்தினம் இந்தியாவுக்கு வந்த பராக் ஒபாமாவுக்கு இந்திய ஜனாதிபதியின் வாசஸ்தலமான ராஷ்டிரபதி பவனில் இன்று காலை செங்கம்பள வரபேற்பளிக்கப்பட்டது. இவ்வைபவத்தின் பின்னர் புதுடில்லி  ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப்  பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் அமெரிக்க ஜனாபதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாஇ நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ்இ தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் இப்பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டனர்.

பாதுகாப்புஇ வர்த்தகம்இ பொருளாதாரம் உட்பட பல விடயங்கள் குறித்த இப்பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பராக் ஒபாமாவும் மன்மோகன் சிங்கும் கூட்டறிக்கையொன்றை வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி மற்றும் எதிர்கட்சித் தலைவர் சுஸ்மா சவராஜ் ஆகியோரையும் ஒபாமா சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்திய நாடாளுமன்றத்தில்  இன்று மாலை அவர் உரையாற்றவுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .