2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சலவை இயந்திரத்திலிட்டு குழந்தையை கொன்ற தாய்

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவர் பத்து நாள் வயதான தனது குழந்தையை சலவை இயந்திரத்தினுள் இட்டு  கொலை செய்த சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

லிண்ட்ஸே  பிட்லர் எனும் இப்பெண் சலவை இயந்திரத்தினுள் ஆடைகளுடன், பத்து நாள் வயதான பெண்குழந்தையையும் சேர்த்து திணித்து இயந்திரத்தை இயக்கியுள்ளார்.

அச்சிறிய குழந்தை 40 நிமிடங்கள் அந்த சலவை இயந்திரத்திற்குள் சுழற்றப்பட்டு இறந்து கிடந்ததை அப்பெண்ணின் உறவினர் ஒருவர் கண்டறிந்தார்.

அவர் சலவை இயந்திரத்தின் வித்தியாசமான சத்தத்தைக் கேட்டு அதனது கதவை திறந்துப் பார்த்தபோது குழந்தையின் சீர்குலைந்த உடல் துணிகளுக்கிடையில்  கிடந்துள்ளது.

 ஒக்லஹோமா மாநிலத்தின் பேர்ட்ஸ்வில்லே நகரைச் சேர்ந்த 26 வயதான லிண்ட்ஸே பிட்லர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் அவசரகால சேவைப்பிரிவுடன் தொடர்புக்கொண்டு 'எனது குழந்தை இறந்துவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.

அதன்பின் தனது ஆண்ரியுடன் "குழந்தையை நான் கொல்லவில்லை நீதான் கொன்றாய்" என வாதாடுவதும் அத்தொலைபேசி அழைப்பில் பதிவாகியுள்ளது.

மீட்பு பணிக்காக அவ்வீட்டிற்குச் சென்ற பல அவசரசேவைப் பிரிவு ஊழியர்களும் பொலிஸாரும் இச்சம்பவத்தை அறிந்து கண்கலங்கினாராம்.

பல கொலைகள், துப்பாக்கிச் சண்டைகள் பலவற்றை கண்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில், தனது வாழ்க்கையில் தான் சந்தித்த மிக மோசமான குற்றச்செயல் சம்பவம் இதுதான் எனக் கூறியுள்ளார்.

லிண்ட்ஸேவை கைது செய்த பொலிஸார் , லிண்ட்ஸே வேண்டுமென்றே இக்கொலையை செய்தாரா என்பதை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பெண்ணின் 4,3 வயதான இரு மகன்கள் சிறுவர் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • Alfred Wednesday, 10 November 2010 09:38 PM

    தாய் என்ற சொல்லுக்கே அபகீர்த்தி

    Reply : 0       0

    Mazahir Sunday, 14 November 2010 03:15 AM

    இப்படியும் ஒரு தாய் இருக்கிறாளா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .