2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கைத் தமிழர் குறித்து மன்மோகன் சிங் - ஜெயலலிதா பேசினர்

Super User   / 2011 ஜூன் 14 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழக முதலமைச்சரும் அதிமுக தலைவியுமான ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடில்லியில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் சந்தித்துப்பேசினார்.

புதுடில்லியிலுள்ள  இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ் தலத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. சுமார் 20 நிமிடங்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த மாதம் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் அவர் இந்திய பிரதமரை சந்தித்தமை இதுவே முதல் தடவையாகும்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் விவகாரம் மற்றும் இலங்கைத் தமிழர் பிரச்சினை ஆகிய இப்பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெற்றதாக தெரிவித்தார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும் இச்சந்திப்பில் கலந்துகொண்டதாகவும் ஜெயலலிதா கூறினார். இது குறித்த மேலதிக விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியை தோற்கடித்து அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அதிமுக சேருமா எனக் கேட்கப்பட்டபோது, ஐ.மு.கூட்டணியிலிருந்து இதுவரை யாரும் அது தொடர்பாக தம்மை அணுகவில்லை எனவும் அதனால் அதில் இணைவது குறித்த கேள்வி எழவில்லை எனவும் ஜெயலலிதா பதிலளித்தார்.

அதேவேளை, தமிழ்நாடு மாநிலத்தின் நலன்கருதி மத்திய அரசுடன் எந்த மோதலிலும் ஈடுபடுவதற்கு தான் விரும்பவிலிலை என ஜெயலலிதா செ;யதியாளர்களிடம் தெரிவித்தார்.

புதுடில்லி தமிழ்நாடு பவனில்  இருந்த ஜெயலலிதா, பிரதமர் அலுவலகம் அனுப்பிய விசேட வாகனமொன்றின் மூலம் ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள பிரதமர் அலுவலகத்தை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • Jeewan Tuesday, 14 June 2011 08:03 PM

    என்ன பேசியிருக்கப் போறாங்க?

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms only Tuesday, 14 June 2011 09:01 PM

    இலங்கை இந்தியப் பொருட்களை பகிஷ்கரித்தால் இந்தியப் பொருளாதாரத்துக்கு எத்துணை நஷ்டம் வரும் என்று ஆராய்ந்து இருப்பர்!

    Reply : 0       0

    Ibnu Wednesday, 15 June 2011 02:38 PM

    Chief Minister Jayalalitha don't have any hold to carry out hers government with out central government support. That is why she is bothering and came back nothing. She has no any issue to give media,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .