2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மியன்மாரில் முதன்முறையாக புத்தாண்டுக் கொண்டாட்டம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 01 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 50 வருடங்களாக இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த மியன்மாரில் ஜனநாயக ஆட்சி முறைமை ஏற்படுத்தப்பட்ட நிலையில் முதன்முறையாக இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

2012ஆம் ஆண்டு நேற்றுடன் முடிந்து இன்று 2013 புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி உலகம் முழுவதும் காத்திருந்த மக்கள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2013ஆம் ஆண்டை மகிழ்ச்சியுடன் கோலாகலமாக வரவேற்றனர்.

வழக்கமாக அஸ்திரேலியாவில்தான் முதலில் புத்தாண்டு பிறக்கும். அதுபோல இந்த ஆண்டும் அங்குதான் முதலாவதாக புத்தாண்டு பிறந்தது. ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி துறைமுக பாலம் மற்றும் சிட்னி ஒபராஹவுஸ் பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

நள்ளிரவு சரியாக 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டு மீண்டும் ஒளிர செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து பொதுமக்களின் 'ஹப்பி நியூ இயர்' என்ற வாழ்த்து கோஷங்கள் முழங்கியது. இதையடுத்து, வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. இக்கொண்டாட்டத்தில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. லண்டன் தேமஸ் நதிக்கரை மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு களை கட்டியது.

மியான்மிரில் இந்த ஆண்டு முதன் முறையாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இங்கு சுமார் 50 ஆண்டுகளாக இராணுவ ஆட்சி நிலவியது. இதனால் புத்தாண்டுக் கொண்டாட்டம் அங்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டதை தொடர்ந்து அதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. எனவே மக்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை கொண்டாடினார்கள். தலைநகர் ரங்கூனில் கண்கவரும் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அதை பார்த்து மகிழ்ந்தனர்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த கொண்டாட்டத்தின்போது வீதிகளில் திரண்டிருந்த மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மெக்சிகோவில் ரியோடி ஜெனிரோவின் சொபாகயானா கடற்கரையிலும், சீனாவின் பெய்ஜிங் ஷாங்காங் நகரிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.
 
வடகொரியா தலைநகர் பியாங்யாங், தென்கொரியா தலைநகர் சீயோல் ஆகிய இடங்களில் அந்நாடுகளின் 15ஆம் நூற்றாண்டின் பாரம்பரிய முறைப்படி 33 தடவை மணி ஒலிக்கப்பட்டது. அங்கு வாணவேடிக்கை நடந்தது.

புற்றுநோயினால் அவதிப்படும் வெனிசுலா ஜனாதிபதி ஹீகோ சாவேஷ் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. எனவே கராகஸ் நகரில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை அரசு ரத்து செய்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .