2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிலி பூமியதிர்ச்சியில் ஐவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட சிலி கடற்பரப்பில்  புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ள பூமியதிர்ச்சியில் குறைந்தபட்சம் 05 பேர் மரணமடைந்துள்ளனர்.

இப்பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 8.2ஆக பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலியில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

க்யூகியூ பகுதியின் வடமேற்கில் சுமார் 86 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிலியின் சில பகுதிகளில் 2.1 மீற்றர் உயரத்தில் கடல் அலைகள்  எழுந்தன. இதனால், அங்கு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து பத்தாயிரணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்துசமுத்திரத்தை அண்டியுள்ள நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (படம்:  ஏ.எப்.பி.)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .