2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நோபல் சமாதான பரிசு 3 பெண்களுக்கு பகிர்ந்தளிப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2011 ஆம் ஆண்டுக்கான நோபல் சமாதானப் பரிசு மூன்று பெண்களுக்கு கூட்டாக வழங்கப்படவுள்ளது. லைபீரிய ஜனாதிபதி எலன் ஜோன்ஸன் சேர்லீப், அவரின் சக நாட்டவரான லேமா ஜிபோவீ, யேமன் நாட்டைச் சேர்ந்த பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர் தவாக்குள் கர்மன் ஆகியோரே நோபல் சமாதான பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

'சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அபிவிருத்திகளில் செல்வாக்குச் செலுத்துவதற்கு ஆண்களைப் போன்று பெண்களும் சமமான வாய்ப்புகளை பெறாவிட்டால் ஜனநாயகத்தையும் நிரந்தர சமாதானத்தையும் நாம் அடைய முடியாது' என நோர்வேயைச் சேர்ந்த நோபல் சமாதான குழு தெரிவித்துள்ளது.

'பெண்களின் பாதுகாப்புக்காகவும் சமாதானத்தை கட்டியெழுப்பும் பணியில் பெண்களின் முழுமையான பங்களிப்புக்காகவும் வன்முறையற்ற போராட்டம் நடத்தியமைக்காக இம்மூன்று பெண்களையும் கௌரவிப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக நோபல் சமாதான பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

கடந்த 7 வருடகாலத்தில் நோபல் சமாதான பரிசு பெண்களுக்கு வழங்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .