2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

75 பேருக்கு எகிப்தில் மரண தண்டனை

Editorial   / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபலமான இஸ்லாமியத் தலைவர் எஸாம் அல்-எரியன், மொஹமட் பெல்டகி உள்ளிட்ட 75 பேருக்கு, நூற்றுக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்புப் படைகள் கொன்ற 2013ஆம் ஆண்டு போராட்டம் தொடர்பில் எகிப்திய நீதிமன்றமொன்று மரண தண்டனை விதித்து நேற்று  தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சிக்காதரவாக, எகிப்தியத் தலைநகர் றபா அடவியா சந்துக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொலை, வன்முறையைத் தூண்டியதாகக குற்றஞ்சாட்டப்பட்டே தண்டனை வழங்கப்பட்டதுடன், 600க்கும் மேற்பட்டோருக்கு சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் மொஹமட் படி, டசின் கணக்கானோருக்கு ஆயுட் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களுக்கு ஐந்து தொடக்கம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குறித்த தீர்ப்புகளுக்கெதிராக 60 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்தின் முதலாவது இஸ்லாமிய ஜனாதிபதியான மொஹமட் மோர்சியை இராணுவம் பதவியிலிருந்து அகற்றிய சில வாரங்களிலேயே குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.

பல ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயுததந் தரித்திருந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் எண்மர் கொல்லப்பட்டதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்ற நிலையில், 800க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் இறந்ததாக மனித உரிமைகள் குழுக்கள் தெரிவித்துள்ளன.

சிறைத்தண்டனை பெற்றவர்களில் ஐக்கிய அமெரிக்க பிரஜையான முஸ்தபா காஸிமும் உள்ளடங்குவதாக மனித உரிமைகள் குழுவான விசாரணைக்கு முந்தையதான உரிமைகளுக்கான சர்வதேசக் குழு தெரிவித்துள்ளது.

எகிப்தின் மிக நெருக்கமான மேற்குலக நாடு ஐக்கிய அமெரிக்கா என்பதோடு, எகிப்துக்கு பெருமளிவில் உதவிகளை வழங்கும் நாடாக உள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .