2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஆப்கானிஸ்தானில் மோதல் தவிர்ப்பு

Editorial   / 2018 ஜூன் 11 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் மீதான ஐக்கிய அமெரிக்காவில் இராணுவத் தலையீடு, 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற பின்னர் முதன்முறையாக, மோதல் தவிர்ப்பொன்றைக் கடைப்பிடிப்பதாக, தலிபான்கள் அறிவித்துள்ளனர். முஸ்லிம்களின் புனித நாளான ஈகைத் திருநாளை முன்னிட்டே, 3 நாட்களுக்கு நீடிக்கும் வகையில், இந்த மோதல் தவிர்ப்பு, நேற்று முன்தினம் (09) அறிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் படைகளுக்கெதிரான இந்த மோதல் தவிர்ப்பு, சரியாக எத்தனையாம் திகதி கடைப்பிடிக்கப்படும் என, உறுதியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், ரமழான் மாதத்தின் முடிவாக, ஆப்கானிஸ்தான் நாள்காட்டிகளில் 15ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அத்தினத்துக்கு முன்னும் பின்னுமாக, மோதல் தவிர்ப்புக் கடைப்பிடிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அரசாங்கம், ஒரு வாரகாலத்துக்கான மோதல் தவிர்ப்பை, ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஜனாதிபதி அஷ்ரப் கானியின் அறிவிப்புப்படி, நாளை (12) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையிலான காலப்பகுதி, அரசாங்கப் படைகளின் மோதல் தவிர்ப்புக் காலமாக அமையும்.

அரசாங்கத்தின் இவ்வறிவிப்புக்கான பதிலாகவே, தலிபான்களின் அறிவிப்பு அமைந்தது. ஆனால், தலிபான்களின் இந்த மோதல் தவிர்ப்பு, ஆப்கானிஸ்தான் படைகளுக்கு மாத்திரமே பொருத்தமானது. ஆப்கானிஸ்தானிலுள்ள ஐ.அமெரிக்கப் படைகள் மீதான தலிபான்களின் தாக்குதல்கள் தொடருமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தலிபான்கள் விடுத்த அறிவிப்பில், “வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள், விதிவிலக்கானவர்கள்” என்று, மோதல் தவிர்ப்புத் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .