2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘எல்லைச் சண்டைகளில் 100 பேர் கொல்லப்பட்டனர்’

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 07 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதியோப்பியாவின் அஃபார், சோமாலிப் பிராந்தியங்களுக்கிடையிலான எல்லை மோதல்களில், குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக, அஃபார் பிராந்திய பிரதிப் பொலிஸ் ஆணையாளர் அஹ்மட் ஹுமெட், நேற்று தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மோதல்கள் வெடித்ததிலிருந்து ஏறத்தாழ 100 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், நேற்று முன்தினமும் மோதல்கள் தொடருவதாகத் தெரிவித்த ஹுமெட், வன்முறைக்கு சோமாலி பிராந்தியப் படைகளின் தாக்குதலொன்றைச் சாடியுள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 25 பேர் கொல்லப்பட்டதாகவும், அதே படைகளிலான தொடர்ந்த தாக்குதலொன்றில் நேற்று எண்ணிக்கை தெரியாத பொதுமக்கள் இறந்ததாக, சோமாலி பிராந்தியப் பேச்சாளர் அலி பெடெல் தெரிவித்துள்ளார்.

இரண்டு தரப்புகளும் தாக்குதல்களை ஆரம்பித்ததை மறுத்துள்ளதுடன், மற்றையதை வன்முறைக்காகச் சாடியுள்ளன.

இயந்திரத் துப்பாக்கி, றொக்கெட்டால் ஏவப்படும் கிரனேட்கள் உள்ளடங்கலாக கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி ஹருக், ஜெவனே பகுதிகளை சோமாலி பிராந்திய சிறப்புப் படைகள் தாக்கியதாகவும், நித்திரை கொண்டிருக்கும்போது சிறுவர்களும், பெண்களும் கொல்லப்பட்டதாக ஹுமெட் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .