2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கறுப்புப் பட்டியலில் மசூட் அஸாரை உள்ளடக்குவதை தாமதப்படுத்தும் சீனா

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜைஷ்-ஈ-மொஹமட்டின் தலைவர் மசூட் அஸாரை, ஐக்கிய நாடுகளின் பயங்கரவாதக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான பிரித்தானியா, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் கோரிக்கையொன்றை, நேற்று முன்தினம் சீனா இடைநிறுத்தியுள்ளதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், இந்தியப் படைகள் 40 பேரை காஷ்மிரில் கொன்ற, கடந்த மாதத் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு உரிமை கோரிய ஜைஷ்-ஈ-மொஹமட்டின் தலைவர் மசூட் அஸாரை, பூகோள ரீதியில் பயணத்தடைக்குள்ளாக்கும் சொத்துக்களை முடக்கும் ஐக்கிய நாடுகளின் தடைசெய்யப்படும் கறுப்புப்பட்டியலில் சேர்ப்பதற்கு மூன்றாவது தடவையாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட கோரிக்கையை சீனா இடைநிறுத்தியுள்ளது.

முன்னதாக, 2016, 2017ஆம் ஆண்டுகளிலும் மசூட் அஸாரின் மீது தடைகளை விதிப்பதை சீனா முடக்கியிருந்தது. ஜைஷ்-ஈ-மொஹமட் குழுவானது, 2001ஆம் ஆண்டு பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாதுகாப்புச் சபைக்கு அனுப்பப்பட்ட குறிப்பொன்றில், மசூட் அஸாரை இலக்கு வைக்கும் தடைகளை ஆராய்வதற்கு தமக்கு மேலதிக நேரம் தேவை என சீனா தெரிவித்துள்ளதாக, இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .