2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தானில் அலுவலகமென்கிறார் ஜனாதிபதி

Editorial   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் அலுவலகமொன்றை திறக்கும் வாய்ப்பை தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி நேற்று  வழங்கியிருந்த நிலையில் அதை நிராகரித்துள்ள தலிபான்கள், அஷ்ரப் கானியின் அரசாங்கத்தை துரித்தப்படுத்தப்பட்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளிலிருந்து தள்ளி வைப்பதில் உறுதியாயுள்ளனர்.

ஐக்கிய அமெரிக்காவுடனான பேரம்பேசல்கள், ஆப்கானிஸ்தானின் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் நடந்த பேச்ச்சுகளில் அஷ்ரப் கானியின் நிர்வாகத்தை தலிபான்கள் புறக்கணித்தநிலையிலேயே, தமக்கும் தலிபான்களுக்குமிடையிலான எவ்வித எதிர்கால இராஜதந்திர உறவுக்கு உதவும் தலிபான்களுக்கான உத்தியோகபூர்வ முகவரியை வழங்குவதாக அஷ்ரப் கானி கூறியுள்ளார்.

“அலுவலகமொன்று தலிபானுக்கு வேண்டுமானால், காபூல், நன்கர்ஹர் அல்லது கந்தகாரில் நாளை அவர்களுக்கு வழங்குவேன்” என நன்கர்ஹருக்கு விஜயம் செய்யும்போது அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

தலிபான் அங்கத்தர்கள் மீதான மேற்குலகத்தின் தடைகளை, பயணத் தடைகளை நீக்கல், சிறைக்கைதிகளை விடுதலை செய்தல், தலிபானுக்கெதிரான பிரசாரத்தை நிறுத்துதல் உள்ளடங்கலான கோரிக்கைகளில் உத்தியோகபூர்வ அலுவலகமொன்றின் முக்கியத்துவத்தை தலிபான் அதிகாரிகள் மொஸ்கோவில் கடந்த வாரம் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த தலிபானின் பேச்சாளர் சொஹைல் ஷகின், ஏற்கெனவே கட்டார் தலைநகர் டோகாவிலுள்ள தமதலுவலகத்துக்கான சர்வதேச அங்கிகாரத்தையே கவனத்தில் கொள்வதாகக் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .