2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘நீதியரசர்களை விடுவிக்குக’

Editorial   / 2018 பெப்ரவரி 08 , மு.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளில் கைதுசெய்யப்பட்டுள்ள நீதியரசர்களை உடனடியாக விடுவிக்குமாறு, சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. மாலைதீவுகளில் காணப்படும் இந்நெருக்கடியை, உலகின் கண்கள் முழுவதும் அவதானித்து வருகின்றன என்றும், அச்சபை எச்சரித்துள்ளது.

மாலைதீவுகளின் பிரதம நீதியரசரும் இன்னொரு நீதியரசரும், நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்நிலைமை தொடர்பாகத் தமது கவனத்தை வெளிப்படுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, அவசரகால நிலையைப் பயன்படுத்தி, மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென, ஜனாதிபதி அப்துல்லா யமீனைக் கோரியுள்ளது.

“உலகின் கண்கள் முழுவதும், மாலைதீவின் மேல் உள்ளன. தற்போது இடம்பெற்றுவரும் நெருக்கடிகளில் பாதிக்கப்படும் ஒன்றாக, மனித உரிமை மீறல்கள் மாறிவிடக்கூடாது” என, மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் தெரிவித்தார்.

நீதியரசர்களும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென, மன்னிப்புச் சபை, மேலும் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .