2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டரங்கு அமைக்கப்படும்:நாமல் ராஜபக்‌ஷ

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

யாழ். மாவட்டக் கரப்பந்தாட்ட விளையாட்டின் வளர்ச்சிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டரங்கு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ‘இளைஞர்களுக்கான நாளை’ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பொதுநிர்வாக அலுவல்கள் திணைக்களத்தின் 40ஆவது ஆண்டு நிறைவையொட்டி ’மஹிந்த தங்கக் கிண்ணத்துக்கான’ கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமானது. இந்தச் சுற்றுப்போட்டியை நாமல் ராஜபக்சக் ஆரம்பித்து வைத்தார்.

இந்த வைபத்தின்போது, யாழ். மாவட்டத்தில் கரப்பந்தாட்டத்தை வளர்தெடுப்பதற்குரிய வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டரங்கொன்று இதுவரையில் இல்லை என்பதுடன், இந்நிலையில் அத்தகைய உள்ளக விளையாட்டரங்கொன்றை அமைத்துத் தரவேண்டும் எனவும் யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தினர் மகஜரொன்றை நாமல் ராஜபக்‌ஷவிடம் கையளித்தனர்.

இதன்போதே, தன்னாலியன்ற முழு முயற்சிகளையும் மேற்கொண்டு கூடிய விரைவில் குடாநாட்டில் சகல வசதிகளும் கொண்ட நவீன கரப்பந்தாட்ட உள்ளக விளையாட்டரங்கை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக நாமல் உறுதியளித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .