2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் கேட்கும் டெக் டிஜிட்டல் காப்பகம் திறப்பு

Kogilavani   / 2012 நவம்பர் 11 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

கர்நாடக இசை ஒலிப்பதிவுகளை உள்ளடக்கிய கேட்கும் டெக் டிஜிட்டல் காப்பகமொன்று நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள கிழக்கு பல்கலைக்கழ சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.டி.சாரி என்பவர்; தனது சொந்த நிதிச்செலவில் இக் காப்பகத்திற்கான உபகரணங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிறேம்குமர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் சென்னை சங்கீத வித்வத் சபையின் தலைவர் என்.முரளி, சென்னை சங்கீத வித்வத் சபையின் செயலாளர் கலாநிதி பப்பு வேணுகோபால், அதன் முகாமைத்துவ பணிப்பாளர் ஆர்.டி.சாரி, சிங்கப்பூர் இந்திய நுண்கலைக்கழகத்தின் செயலாளர் கலாநிதி எஸ்.டி.காசிநாதன், கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் திருமதி முத்துலட்சுமி வினோபா உட்பட கிழக்கு பல்கலைக்கழ சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பதிவாளர் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது இந்த கர்நாடக இசை ஒலிப்பதிவுகளை உள்ளடக்கிய கேட்கும் டெக் டிஜிட்டல் காப்பகம் திறந்து வைக்கப்பட்டு கர்நாடக இசை ஒலிப்பதிவுகளை உள்ளடக்கிய டிஜிட்டல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .