2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மௌனகுருவின் ஆய்வுகூடத்திற்கு தமிழ் அகவை காற்று கலைக்கழக பாலேந்திரா வருகை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 26 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


நாடக நெறியாளரும் இலங்கையின் நவீன அரங்கினை நெறிப்படுத்தியவருமான தமிழ் அகவைக் காற்றுக் கலைக் கழக க.பாலேந்திரா நேற்று வியாழக்கிழமை பேராசிரியர் சி.மௌனகுருவின் மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடத்திற்கு வருகை தந்தார்.

இதன்போது பாலேந்திராவின் கடந்தகால செயற்பாடுகள், நாடகப்பணிகள், அனுபவங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்றது.

அத்துடன், அவருடைய நாடகங்கள் மற்றும் ஏனைய முயற்சிகள் குறித்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு அவை தொடர்பான கலந்துரையாடல்களும் நடைபெற்றன.

இக்கலந்துரையாடலில் அரங்க ஆய்வுகூட மாணவர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாலேந்திராவின்  கண்ணாடி வார்ப்புக்கள், பாடம், சம்பந்தம் ஆகிய நாடகங்கள் பிரபலம் பெற்றவையாகும்.

இலங்கைத் தமிழ் அரங்க வரலாற்றில் 1970 களில் நவீன மொழிபெயர்ப்பு நாடகங்களின் முன்னோடிகளாகத் திகழ்ந்த முன்னணி நெறியாளர் பாலேந்திரா நீண்ட இடைவெளிக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேநேரம் தமிழ் அகவைக் காற்றுக் கலைக் கழக க.பாலேந்திரா குழுவினரின் மாபெரும் நாடக விழா நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நாடக விழாவிற்கான அனுசரனையினை திருமறைக் கலாமன்றம் சப்தமி ஒலிப்பதிவுக்கூடம், கலை இலக்கியப் பேரவை ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .