2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்று ஊடகவியலாளர் சிவராமின் ஐந்தாவது ஆண்டு நினைவுதினம்

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் ஐந்தாவது ஆண்டு நினைவுதினம் இன்று ஆகும்.

தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005ஆம் ஆண்டு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

'தராக்கி' மற்றும் 'எஸ்.ஆர்' ஆகிய புனைபெயர்களில் சிவராம் பல ஆக்கங்களை எழுதிவந்திருந்தார். ஆங்கில ஊடகத்துறை மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்தினார். எனினும், பிற்காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் ஆக்கங்கள் எழுதுவதை சிவராம் நிறுத்திக்கொண்டார்.

இந்த நிலையில், 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி  "நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்..." என்று வீரகேசரி வார வெளியீட்டில் சிவராம் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் பலரை கணினி யுகத்திற்குள் கொண்டுவந்த பெருமையும் சிவராமையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .