2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘கடமையிலிருந்து தவறினால் மூடிவிடுங்கள்’

George   / 2017 ஜூன் 01 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ் 

“தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பிலிருந்து தவறியிருந்தால் வளிமண்டளவியல் திணைக்களத்தை மூடிவிடவேண்டும்” என, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, நாட்டின் தற்போதைய அனர்த்த நிலை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இதனைக் கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில் “கடந்த வாரம் நாட்டில் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் நாடு பாரிய இன்னலுக்கு முகங்கொடுத்துள்ளது. இது குறித்து அறிவிக்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது. எனினும், அது எமது தவறல்ல. 

இது குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் உரிய அறிவித்தலை விடுக்கவில்லை. இவ்வாறு திடீரென வௌ்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என, எமக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை” என்றார். 

இதன்போது, குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள், “வளிமண்டளவியல் திணைக்களம் உரிய முறையில் அனர்த்தம் தொடர்பில் அறிவிக்க தவறிவிட்டது. அதனால், அத்திணைக்களம் தேவையில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனரே” என, கேள்வியெழுப்பினர். 

“அதற்கு பதிலளித்த அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, “அரச நிறுவனங்கள் ​பொதுமக்களின் தேவைக்காகவே இருக்கின்றன. அவை தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றாமல் விடும்போது, அவை தேவையில்லை. 

“வளிமண்டளவியல் திணைக்களம் தனது கடமையிலிருந்து தவறியிருந்தால், அந்தத் திணைக்களத்தை பிரதமர், ஜோன் அமரதுங்க சொல்தைபோல மூடிவிடலாம். எனினும், கடந்த 24ஆம் திகதி மழை காலநிலை குறித்து அத்திணைக்களம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதனால், அத்திணைக்களம் தனது கடமையிலிருந்து தவறவில்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .